Advertisement

024ம் ஆண்டுக்கான `கேட்’ தேர்வு பிப். 3-ம் தேதி தொடக்கம்

By: vaithegi Mon, 28 Aug 2023 10:44:39 AM

024ம் ஆண்டுக்கான `கேட்’ தேர்வு பிப். 3-ம் தேதி தொடக்கம்

சென்னை: பொறியல் பட்டப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இத்தேர்வினை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) மத்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது.

அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) வெளியிட்டு உள்ளது. இதையடுத்து அதில், 2024-ல் நடைபெறவுள்ள கேட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 30-ம் தேதி தொடங்கி செப். 29-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

gate exam,application registration ,கேட் தேர்வு ,விண்ணப்பப் பதிவு

விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3, 4, 10 மற்றும் 11-ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளது. தேர்வானது கணினி வாயிலாக நாள்தோறும் காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படும். இதை ஐஐஎஸ்சி, 7 ஐஐடி-க்களுடன் இணைந்து நடத்தவுள்ளது.

தேர்வு முடிவுகள் அடுத்தாண்டு மார்ச் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, அதே மாதம் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மதிப்பெண் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் கேட் தேர்வு நடைபெறும் நாட்களில், வேறு எத்தேர்வுகளும் நடைபெறாதபடி தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :