Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோர் வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக நியமனம்

கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோர் வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக நியமனம்

By: Karunakaran Wed, 23 Dec 2020 09:40:52 AM

கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோர் வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக நியமனம்

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோன்று துணை அதிபராக தெற்காசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், அதிபருக்கான அதிகாரத்துடன் அவர் பல்வேறு பதவிகளுக்கும் ஆட்களை நியமனம் செய்து வருகிறார். இந்நிலையில், இந்திய வம்சாவளிகளான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குனர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பைடன் வழங்கி உள்ளார்.

gautam raghavan,vinay reddy,white house,joe biden ,கவுதம் ராகவன், வினய் ரெட்டி, வெள்ளை மாளிகை, ஜோ பிடென்

இதில், அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் கவுதம், பைடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இதுதவிர வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களின் வேறு சில பெயர்களையும் பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்கா தேர்தலில் அதிபர் டிரம்ப் போட்டியிட்டு தோல்வியுற்றார். இருப்பினும் ஜோ பைடன் பதிவியேற்கும் வரை அதிபர் டிரம்ப் அதிபராக நீடித்து வருகிறார்.

Tags :