Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காபோனின் இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்றார்

காபோனின் இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்றார்

By: Nagaraj Wed, 06 Sept 2023 07:20:54 AM

காபோனின் இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்றார்

காபோன்: பதவியேற்றார்... காபோனில் ஆட்சி கவிழ்ப்பு.. இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்றார்.

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோவின் வெற்றி செல்லாது என அறிவித்த ராணுவம், திடீரென கிளர்ச்சி செய்து கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது. ஜனாதிபதி அலி போங்கோ வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

gabon,general,inauguration,interim-president,overthrow,price nguma,regime ,ஆட்சி, இடைக்கால அதிபர், கவிழ்ப்பு, காபோன், ஜெனரல், பதவியேற்பு, பிரைஸ் நிகுமா

இதன் மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அரசாங்கத்தை கவிழ்த்த இராணுவக் குழுவின் தலைவர் ஜெனரல் பிரைஸ் நுகுமா நாட்டின் இடைக்கால அதிபராக இன்று பதவியேற்கவுள்ளார்.

ஜெனரல் பிரைஸ் நுகுமாவுக்கும் சில மக்கள் ஆதரவு உள்ளது. எவ்வாறாயினும், அலி போங்கோவின் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சியின் தொடர்ச்சியாகவே ஜெனரல் பிரைஸ் நுகுமாவின் ஆட்சி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|