Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாளை சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாளை சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்

By: Nagaraj Thu, 09 July 2020 7:18:11 PM

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாளை சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாளை சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடக்கிறது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் கடந்த மாதம் உத்தரவிட்டதை அடுத்து, புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

கொரோனா பேரிடருக்கு இடையே சிங்கப்பூர் மக்கள் நாளை பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கொரோனா பேரிடரால் சிங்கப்பூரும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், சிங்கப்பூர் பிரதமராக இருந்த லீ ஸீன் லூங் கரோனா பேரிடரை எவ்வாறு கையாண்டார் என்பது குறித்த முடிவை அந்நாட்டு மக்கள் நாளை நிர்ணயிக்க உள்ளனர்.

singapore,corona,economic environment,general election ,சிங்கப்பூர், கொரோனா, பொருளாதார சூழல், பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலுக்கு சுமார் 10 மாதங்கள் இருந்த நிலையில், பிரதமர் லீ ஸீன் நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை அறிவித்தார். 1950-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் லீயின் கட்சியே தொடர்ந்து ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று வருகிறது. 2011ஆம் ஆண்டு இந்த கட்சிக்கு 60% வாக்குகளே கிடைத்தது, கட்சித் தலைமைக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது. எனவே, வரும் பொதுத் தேர்தலில் லீ கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்பினாலும், கொரோனா பேரிடரை அரசு எவ்வாறு கையாண்டது என்பதை வைத்தே, மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.

அதே சமயம், எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியும் பொதுத் தேர்தலில் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் ஆட்சியைக் கலைத்த போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் லீ ஸீன் லூங் கூறியதாவது:

singapore,corona,economic environment,general election ,சிங்கப்பூர், கொரோனா, பொருளாதார சூழல், பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் கெதரோனா வைரசின் தாக்கத்தினால் ஏற்பட்ட சூழல் தற்போது கட்டுக்குள் இருப்பதால், பொதுத்தேர்தலை நடத்தி விடலாம் என்று கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய அரசுக்கு ஆட்சி செய்வதற்கு முழுதாக ஐந்து ஆண்டுகள் கிடைக்கும்.

புதிதாகத் தேர்வு செய்யபப்டும் அரசானது கொரோனா பாதிப்பைக் கையாளுதல், நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேசிய செயல் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதுதொடர்பாக முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Tags :
|