Advertisement

இன்று வெளியாகிறது பொதுத் தேர்வு அட்டவணை

By: vaithegi Thu, 16 Nov 2023 09:45:15 AM

இன்று வெளியாகிறது பொதுத் தேர்வு அட்டவணை

சென்னை: 10-ம் , 11-ம் ,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு ......தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10 -ம் ,11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது .

நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வுகள் 12 ஆம் வகுப்புக்கு மார்ச் 18ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு மார்ச் 19ஆம் தேதியும் ,பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 8ம் தேதியும் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

எனவே இதற்கான தேர்வு அட்டவணை தற்போது தயாராகி கொண்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் உயர்கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பொது தேர்வுக்கான கால அட்டவணை விரைவாக தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்படுகிறது.

public examination schedule,department of education,entrance examination ,பொதுத் தேர்வு அட்டவணை,பள்ளிக்கல்வித்துறை , நுழைவுத் தேர்வு

அந்த வகையில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தேர்வு துறை சார்பில் இன்று வெளியாகிறது.

இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறார்.

Tags :