Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேற்கு வங்கத்தில் ஜுலை 31ம் தேதி வரை பொது முடக்கம்; முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் ஜுலை 31ம் தேதி வரை பொது முடக்கம்; முதல்வர் அறிவிப்பு

By: Nagaraj Thu, 25 June 2020 12:06:00 PM

மேற்கு வங்கத்தில் ஜுலை 31ம் தேதி வரை பொது முடக்கம்; முதல்வர் அறிவிப்பு

அடுத்த மாதம் 31ம் தேதி வரை பொது முடக்கம்... மேற்கு வங்கத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அடுத்த மாதம் 31ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவர் கூட்டியிருந்தார்.

இந்த கூட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இறுதியாக ஜூலை இறுதி வரை தளர்வுகளுடன் தடைகளை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

general freeze,extension,chief minister mamta,on july 31st ,பொது முடக்கம், நீட்டிப்பு, முதல்வர் மம்தா, ஜுலை 31ம் தேதி

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மம்தா, வைரஸ் பரவலைத் தடுக்க ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜூலை 31 வரை மூடப்படும் என்றும் அரசு அலுவலகங்களைப் பொருத்தவரை, தற்போது செயல்படுவதை போல தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஒவ்வொரு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தமிழகத்தில் நேற்று இனி மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை வரும் 30ம் தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில மேற்கு வங்கத்தில் அடுத்த மாதம் இறுதி வரை பொது முடக்கம் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :