Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்

ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்

By: Nagaraj Thu, 02 Mar 2023 10:42:19 PM

ஜெனரல் மோட்டார் நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்

புதுடில்லி: ஜெனரல் மோட்டார் நிறுவனம் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக நூற்றுக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

சமீபத்திய காலமாகவே தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன. இது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஜெனரல் மோட்டார் நிறுவனம் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக நூற்றுக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.இந்த பணி நீக்க நடவடிக்கையில் நிர்வாக அடிப்படையிலான ஊழியர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரியான ஆர்டன் ஹாப்மேன் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், டெடராய்ட் வாகன உற்பத்தியாளர் 2 பில்லியன் டாலர் அளவுக்கு செலவு குறைப்பை செய்ய திட்டமிட்டுள்ளது.

efficiency,margin ratio,competition,companies,downsizing ,செயல்திறன், மார்ஜின் விகிதம், போட்டி, நிறுவனங்கள், ஆட்கள் குறைப்பு

அதுவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை அமல்படுத்தவும், செலவை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது செலவுகளை குறைப்பதன் மூலம் செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துதாகவும் தெரிகிறது. சர்வதேச அளவில் இருக்கும் இந்த பணி நீக்க நடவடிக்கையில் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதமே இந்த செலவு குறைப்பு நடவடிக்கை குறித்து ஜெனரல் மோட்டார் அறிவித்தது. ஆனால் அப்போது எந்த பணி நீக்கம் குறித்தும் திட்டமிடவில்லை. எங்களின் ஒட்டுமொத்த அமைப்பும் இந்த செலவு குறைப்பினை ஆதரிக்கிறது.

எங்களின் போட்டி நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் என்பது மேம்பட்டு வரும் சூழலில், நாம் இதுபோன்று செயல்படுவதும், நமது செயல்திறனை மேம்படுத்துவதும் அவசியமான ஒன்று.

Tags :