Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவிப்பு

திமுக கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவிப்பு

By: vaithegi Wed, 22 Feb 2023 10:24:00 AM

திமுக கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வருகிற மார்ச் 1-ம் தேதி கொண்டாட இருப்பதாகவும் அன்றைய தினம் நடைபெறும் பிரம்மாண்டமான கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

leaders,duraimurugan ,தலைவர்கள் ,துரைமுருகன்

இதையடுத்து இந்த பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் முக்கிய தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும்

மேலும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள் திரளாக வந்திருந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுவுள்ளார்.

Tags :