Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெர்மன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விரைவில் தயாராகிறது

ஜெர்மன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விரைவில் தயாராகிறது

By: Karunakaran Tue, 23 June 2020 12:41:26 PM

ஜெர்மன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி விரைவில் தயாராகிறது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ்ஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால் கொரோனா தடுப்பு மருந்து எப்பொது உருவாகும் என மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘க்யூர்வேக்’ என்ற நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம் ஆகும். டியுபிங்கன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

german,coronavirus,corona vaccine,curevac ,கொரோனா தடுப்பூசி,ஜெர்மனி,க்யூர்வேக்,கொரோனா சிகிச்சை

தற்போது, இந்த தடுப்பூசி உருவாக்கும் பணி இறுதி நிலையை அடைந்துள்ளது. இதனை பரிசோதிக்க முதலில் 144 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜெர்மன் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இன்னும் 2 மாதங்களில் இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டியுபிங்கன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், பரிசோதனைக்கு பின் அடுத்த ஆண்டு மத்தியில், இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags :
|