Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பலூனில் பறக்கும் பந்தயத்தில் ஜெர்மனியை சேர்ந்த தந்தை, மகனுக்கு முதல் பரிசு

பலூனில் பறக்கும் பந்தயத்தில் ஜெர்மனியை சேர்ந்த தந்தை, மகனுக்கு முதல் பரிசு

By: Nagaraj Wed, 07 Sept 2022 3:48:31 PM

பலூனில் பறக்கும் பந்தயத்தில் ஜெர்மனியை சேர்ந்த தந்தை, மகனுக்கு முதல் பரிசு

சுவிட்சர்லாந்து: தந்தை, மகனுக்கு முதல் பரிசு... சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட பலூனில் பறக்கும் பந்தயத்தில், ஜெர்மனியை சேர்ந்த தந்தையும் மகனும் முதல் பரிசை வென்றனர்.

சுவிட்சர்லாந்து செயின்ட் கேலன் நகரில் 65 ஆண்டுகளாக நடத்தப்படும் பலூன் பந்தயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்நிலையில், இந்த ஆண்டும் பலூன் பந்தயம் தொடங்கி நடைபெற்றது. நடைபெற்ற பலூன் பந்தயத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

interestingly,father,son,first prize,space,have passed ,சுவாரசியம், தந்தை, மகன், முதல்பரிசு, வான்வெளி, கடந்துள்ளனர்

அதில் ஜெர்மனியைச் சேர்ந்த தந்தையும் மகனும் ஒரு குழுவில் இடம்பெற்று கலந்து கொண்டனர். இந்நிலையில் தந்தையும் மகனும் கலந்துகொண்ட குழுவினர், பல்கேரியன் கருங்கடலையும் கடந்து துருக்கி நாட்டின் எல்லை வரை பலூனில் பயணித்தனர். 1,572 கிலோ மீட்டர் தூரத்தை 12 மணி நேரம் 50 விநாடிகளில் வான்வெளியில் பறந்து இந்த தூரத்தை கடந்துள்ளனர்.

மேலும் அந்த குழு முதல் பரிசை வென்று அசத்தியுள்ளது. தந்தையும் மகனும் கலந்து கொண்ட இந்த சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|