Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் ஜெர்மன் ஷெப்பேர்டு நாய் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஜெர்மன் ஷெப்பேர்டு நாய் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு

By: Karunakaran Sat, 01 Aug 2020 1:38:30 PM

அமெரிக்காவில் ஜெர்மன் ஷெப்பேர்டு நாய் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால் இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுமா என்பது தெரியவில்லை. அதற்கு உறுதியான ஆதாரங்களும் இல்லை. ஆனால் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு குறிப்பாக செல்லப்பிராணிகளுக்கு கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

ஹாங்காங்கில் 2 நாய்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்காவில் முதல்முறையாக செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த ஜெர்மன் ஷெப்பேர்டு நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாய்தான், அமெரிக்காவில் முதன்முதலாக கொரோனா பாதிப்புக்கு ஆளான செல்லப்பிராணி ஆகும்.

german shepherd,corona virus,us,death ,ஜெர்மன் ஷெப்பர்ட், கொரோனா வைரஸ், அமெரிக்கா, மரணம்

இதற்கு முன், இந்த நாயின் எஜமானர்களில் ஒருவரான ராபர்ட் மஹோனிக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்துள்ளன. இவர்களிடமிருந்து இந்த நாய்க்கு கொரோனா பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 11-ந் தேதி ரத்த வாந்தி எடுத்ததையடுத்து அந்த நாயை கருணைக்கொலை செய்து சாகடித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த நாய் மரணமடைந்ததா என தெரியவில்லை. ஆனால், அந்த நாயின் ரத்த பரிசோதனைகள் அதற்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் புற்றுநோய் ஏற்பட்டிருந்ததை காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|