Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெர்மனி கூட்டு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனை

ஜெர்மனி கூட்டு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனை

By: Nagaraj Tue, 28 July 2020 7:17:08 PM

ஜெர்மனி கூட்டு தயாரிப்பு கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனை

இறுதி கட்ட பரிசோதனை... ஜெர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனை உலகளவில் 30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட உள்ளது.

ஜெர்மனியின் BioNTech நிறுவனமும், அமெரிக்காவின் Pfizer நிறுவனமும் கூட்டாக கொரோனா தடுப்பூசியை (BNT162b2) உருவாக்கியுள்ளன. இதற்கான இறுதிக் கட்ட பரிசோதனை, உலகளவில் 120 இடங்களை தேர்வு செய்து, 30ஆயிரம் பேர் பங்கேற்புடன் நடத்தப்பட உள்ளது.

vaccination,testing,german,corona,october ,தடுப்பூசி, பரிசோதனை, ஜெர்மன், கொரோனா, அக்டோபர்

இந்த மூன்றாம் நிலை பரிசோதனையும் வெற்றிபெற்றால், தடுப்பூசியின் பொது பயன்பாட்டுக்கு அனுமதி கோரி, பயான்டெக்-ஃபைசர் நிறுவனங்கள் வரும் அக்டோபரில் விண்ணப்பிக்க உள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி டோஸ்களையும், 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 130 கோடி டோஸ்களையும் தயாரித்து விநியோகிக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமும் 30 ஆயிரம் பேர் பங்கேற்கும் இறுதிக்கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனையை தொடங்கியுள்ளது.

Tags :
|
|