Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் பொது செயலாளர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிப்பு

காங்கிரஸ் பொது செயலாளர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிப்பு

By: Nagaraj Sat, 12 Sept 2020 09:00:15 AM

காங்கிரஸ் பொது செயலாளர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிப்பு

பதவியை பறித்தனர்... காங்.,கட்சியின் பொது செயலாளர் பதவியில் இருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டு உள்ளதாக காங்., பொது செயலாளர் கே.சி.,வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என காங்., பொதுசெயலாளராக இருந்த குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர் கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து குலாம்நபி ஆசாத், அம்பிகாசோனி, மல்லிகாஜூனா கார்கே, மோதிலால்வோரா ஆகியோர் பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

coup,ghulam nabi azad,manikkam tagore,telangana ,பதவி பறிப்பு, குலாம் நபி ஆசாத், மாணிக்கம் தாகூர், தெலங்கானா

மேலும் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து காரிய கமிட்டி உறுப்பினர்களாக ராகுல், பிரியங்கா, மாணிக்கம் தாகூர் , செல்லக்குமார், சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு உறுப்பினராக ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக பாண்டிச்சேரி, கோவா மாநில பொறுப்பாளராகவும் இருப்பார். முன்னதாக தமிழகத்திற்கான பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் ம.பி.,மாநிலத்திற்கு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
|