Advertisement

பெண் காவலர்களின் பாய்மர படகு பயணம் நிறைவடைந்தது

By: Nagaraj Sun, 18 June 2023 9:32:09 PM

பெண் காவலர்களின் பாய்மர படகு பயணம் நிறைவடைந்தது

சென்னை: பெண் காவலர்களின் பாய்மர படகில் 1000 கி.மீ. பயணம் நிறைவடைந்தது.

தமிழக காவல்துறையில் பெண் காவலர்களின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 3 பாய்மர படகுகள் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து கோடியக்கரைக்கு பழவேற்காடு வழியாக 30 பெண் காவலர்கள் பயணம் செய்யும் திட்டத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1000 km,female,police,sailboat,travel, ,1000 கி.மீ.,  பயணம், பாய்மர படகு, பெண், போலீசார்

இந்த நீண்ட கடல் பயணத்தை முடித்துக் கொண்டு மகளிர் போலீசார் நேற்று பாய்மர படகு மூலம் சென்னை திரும்பினர். இந்தப் பயணத்தின் நிறைவு விழா சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.

விழாவில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பாய்மரப் பயணத்தில் பங்கேற்ற மகளிர் காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல், கூடுதல் டிஜிபி (நிர்வாகம்) பாலநாகாதேவி, ஐஜி, ஊழல் தடுப்பு மற்றும் விஜிலென்ஸ் பிரிவு. பவானீஸ்வரி, காவல் கண்காணிப்பாளர்கள், கடலோர காவல்படை குழு கயல்விழி, நிஷா, சுந்தர வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
|
|
|