Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கு கொடுத்தா நீங்களே எடுத்துக் கொள்வதா; கொதித்தெழுந்த பெற்றோர்

மாணவர்களுக்கு கொடுத்தா நீங்களே எடுத்துக் கொள்வதா; கொதித்தெழுந்த பெற்றோர்

By: Nagaraj Mon, 20 Feb 2023 10:11:44 AM

மாணவர்களுக்கு கொடுத்தா நீங்களே எடுத்துக் கொள்வதா; கொதித்தெழுந்த பெற்றோர்

கொல்கத்தா: என்னப்பா... இப்படி பண்ணிட்டீங்களேப்பா... மேற்கு வங்காளத்தில் மதிய உணவு திட்டத்தில் சிக்கன் லெக் பீஸை எடுத்து பதுக்கி வைத்திருந்த ஆசிரியர்களை பெற்றோர்கள் அறையில் பூட்டி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள இங்கிலீஷ் பஜார் பகுதியில் உள்ள அமிர்தி காலனியில் ஒரு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது.

அதில், மாணவர்களுக்கு கோழிக்கறி வழங்கப்படுகிறது. ஆனால் ஆசிரியர்கள் லெக் பீஸை அவர்களே எடுத்து வைத்துக் கொண்டதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதன்பின், கோழியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட மற்ற பாகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதை கவனித்த மாணவர்கள் சிலர் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

kolkata,lunch,parents,teachers, ,ஆசிரியர்கள், கோழிக்கறி, பெற்றோர்கள், மதிய உணவு

இதனால் பெற்றோர் மறுநாள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 6 ஆசிரியர்களையும் அறைக்குள் தள்ளி பூட்டினர். ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 4 மணி நேரம் அறையில் தவித்தனர். தகவலறிந்து போலீசார் வந்து பெற்றோரை சமரசம் செய்ததையடுத்து ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேற்கு வங்காளத்தில் கடந்த ஜனவரி மாதம் மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் கோழி மற்றும் பழங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், சத்தான உணவு தானியங்களை ஆசிரியர்கள் தவறாக பயன்படுத்துவதாகவும், உணவின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக அப்பகுதியில் பேசப்படுகிறது.

Tags :
|