Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் 3-வது முறையாக புதிய உச்சம்

உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் 3-வது முறையாக புதிய உச்சம்

By: vaithegi Fri, 07 July 2023 4:50:41 PM

உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் 3-வது முறையாக புதிய உச்சம்

இந்தியா: புதிய உச்சத்தை தொட்ட உலகின் சராசரி வெப்பநிலை ... உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜூலை 3 -ம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவானது.

இதனை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிக தகிக்கும் வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.

temperature,celsius ,வெப்பநிலை ,செல்சியஸ்

ஆனால், அதை விஞ்சும் வகையில் கடந்த ஜூலை 3-ம் நாள் 17.01 டிகிரி செல்சியஸ் (62.62 டிகிரி பாரன்ஹீட்) சராசரி வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து ஜூலை 4 ம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் (62.9 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. தொடர்ந்து ஜூலை 6 ம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் (62.9 டிகிரி பாரன்ஹீட்) என பதிவானதாக அமெரிக்காவின் மெய்ன்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்து உள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜூலை 3 புதிய உச்சம் பற்றி லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில், "இந்த வெப்பநிலையானது ஏதோ ஒரு மைல்கல் என நினைக்க வேண்டாம். இது நாம் கொண்டாடும் எண் அல்ல. உண்மையில் இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி" என தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

Tags :