Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61.53 கோடியை தாண்டியுள்ளது

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61.53 கோடியை தாண்டியுள்ளது

By: vaithegi Thu, 15 Sept 2022 11:40:33 AM

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61.53 கோடியை தாண்டியுள்ளது

இந்தியா: கடந்த 20219 ம் ஆண்டின் இறுதியில் சீனா நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. அந்த நாட்டின் உஹான் நகரில் பரவிய கொரோனா விமானப் பயணிகள் மூலம் அடுத்தடுத்த நாடுகளுக்கு விரைவாக பரவியது.

அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்தது.

corona virus ,கொரோனா ,பாதிப்பு

அப்போது உலக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமுள்ள இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் எப்போதும் கிருமி நாசினி மற்றும் முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அதை தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தும் பணிகள் தொடங்கியது. அனைத்து நாடுகளிலும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதை அடுத்து தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61.53 கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 59,43,28,361பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 65,22,891 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Tags :