Advertisement

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.67 கோடியாக உயர்வு

By: Karunakaran Sat, 05 Sept 2020 09:11:33 AM

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.67 கோடியாக உயர்வு

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போது உலகம் முழுவதும் 2.67 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 8.78-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், மருத்துவ துறையினரின் தன்னலமற்ற சேவையால் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1.86-கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.

corona infection,corona virus,world,corona death ,கொரோனா தொற்று, கொரோனா வைரஸ், உலகம், கொரோனா மரணம்

உலகளவில் கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் வேகமெடுத்துள்ளது. கொரோனா அதிகமாக பரவும் நாடுகளில் இந்தியை முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா காரணமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

தற்போது அமெரிக்காவில் 63.87 லட்சம் பேர் இதுவரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரேசிலில் 40.91 லட்சம் பேரும், ரஷ்யாவில் 10.15 லட்சம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags :
|