Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68.02 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68.02 கோடியாக உயர்வு

By: vaithegi Fri, 03 Mar 2023 10:22:36 AM

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68.02 கோடியாக உயர்வு

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் பல்வேறு உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.02 கோடியாக அதிகரிப்பு.

corona,vaccine,world ,கொரோனா ,தடுப்பூசி,உலகம்

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,802,314 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் 680,288,887 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,093,877 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்40,481 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

Tags :
|