Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.08 கோடியாக அதிகரிப்பு

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.08 கோடியாக அதிகரிப்பு

By: vaithegi Sat, 14 Jan 2023 09:33:11 AM

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.08 கோடியாக அதிகரிப்பு

வாஷிங்டன்: சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரசானது 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது.

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

இதையடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 8 லட்சத்து 14 ஆயிரத்து 498 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 836 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 64 கோடியே 20 லட்சத்து 33 ஆயிரத்து 588 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 67 லட்சத்து 27 ஆயிரத்து 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|