Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 57.92 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 57.92 கோடியாக உயர்வு

By: vaithegi Fri, 29 July 2022 3:37:39 PM

உலகளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின்  எண்ணிக்கை 57.92 கோடியாக உயர்வு

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டு வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு உயர்ந்து வருகிறது.

corona,victims ,கொரோனா ,பாதித்தவர்கள்

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 92 லட்சத்து 81 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 35 லட்சத்து 56 ஆயிரத்து 163 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 93 லட்சத்து 11 ஆயிரத்து 362 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 13 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|