Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.96 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.96 கோடியாக உயர்வு

By: vaithegi Sat, 09 July 2022 10:14:10 AM

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.96 கோடியாக உயர்வு

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

vaccine,corona ,தடுப்பூசி ,கொரோனா

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 96 லட்சத்து 64 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 5 லட்சத்து 98 ஆயிரத்து 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 53 கோடியே 26 லட்சத்து 94 ஆயிரத்து 610 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 71 ஆயிரத்து 439 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :