Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 26ம் தேதி காலை விண்ணில் பாய தயாராகிறது ஜிஎல்எஸ்பி எம்கே-3

வரும் 26ம் தேதி காலை விண்ணில் பாய தயாராகிறது ஜிஎல்எஸ்பி எம்கே-3

By: Nagaraj Tue, 21 Mar 2023 7:33:28 PM

வரும் 26ம் தேதி காலை விண்ணில் பாய தயாராகிறது ஜிஎல்எஸ்பி  எம்கே-3

ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளம் 2ல் இருந்து வரும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ராக்கெட் GLSV MK-3விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரித்து, அவற்றில் செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏற்றப்படுகின்றன.

அதுபோல, ஜி.எஸ்.எல்.வி. ‘எல்விஎம்எம்-3’ வகையிலான மற்றொரு ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது.

isro,lvm-3,project,rocket, ,இஸ்ரோ, எல்.வி.எம்-3, திட்டம், ராக்கெட்

எல்விஎம்-3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட் ஆகும். முன்னதாக இந்த ராக்கெட் GLSV MK-3 என்று அழைக்கப்பட்டது.

இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஏவுதளம் 2ல் இருந்து வரும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ராக்கெட் GLSV MK-3விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைக்கோள்களுடன் இந்த ராக்கெட் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள்கள் வெள்ளி (வீனஸ்) கிரகத்தின் மேற்பரப்பில் எரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக பயன்படும். 36 செயற்கைகோள்களின் மொத்த எடை சுமார் 5.8 டன் ஆகும். எல்.வி.எம்-3 ராக்கெட் 8 டன் எடை வரை கொண்டு செல்லும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags :
|
|
|