Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கடவுள் தந்த வரம் - அதிபர் டிரம்ப் கருத்து

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கடவுள் தந்த வரம் - அதிபர் டிரம்ப் கருத்து

By: Karunakaran Thu, 08 Oct 2020 3:03:26 PM

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கடவுள் தந்த வரம் - அதிபர் டிரம்ப் கருத்து

அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அதிபர் டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகின்றார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் உதவியாளர்களில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது விருது செய்யப்பட்டது.

அதன்பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். புதன்கிழமை தனது அலுவலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளார். முககவசம் அணியாமல் அவர் பணிகளை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

god bless,corona damage,trump,america ,கடவுள் ஆசீர்வதிப்பார், கொரோனா சேதம், டிரம்ப், அமெரிக்கா

இந்நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், எனக்கு கொரோனா வந்தது கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுகொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், சீனாவால் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய சீனா அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து சீனாவை குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிபர் டிரம்பின் அலட்சிய போக்கு குறித்து பல்வேறு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Tags :
|