Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது கிடைத்த தங்கக் காசுகள்... அரசிடம் ஒப்படைப்பு

குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது கிடைத்த தங்கக் காசுகள்... அரசிடம் ஒப்படைப்பு

By: Nagaraj Tue, 06 Dec 2022 5:44:49 PM

குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது கிடைத்த தங்கக் காசுகள்... அரசிடம் ஒப்படைப்பு

ஆந்திரா: புதையலாக கிடைத்த தங்க காசுகள்... ஆந்திர மாநிலம் ஏளூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில், குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது, தங்கக் காசுகள் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஏளூர் மாவட்டத்தில் குடி நீர் பாசனத்திற்காக குழாய் பதிக்க வேண்டியது இருந்ததால் இன்று ஒரு பள்ளம் தோண்டினர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 18 தங்க காசுகள் பானையுடன் கிடைத்தது.

andhra,gold coins,pipe,ஆந்திர ,மாநிலம், குடி நீர் பாசனத்திற்காக, தங்க காசுகள்

இந்த பழங்கால தங்கக் காசுகள் கிடைத்துள்ள இடம் கொய்யலகூடம் மண்டலம் ஜங்காரெட்டி குடத்தில் வசிக்கும் தேஜாஸ்ரீ என்ற நபருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டது.

இந்த இடத்தில் இருந்து எடுத்த 18 தங்கக் காசுகளை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதையலாக கிடைத்த இவற்றின் மதிப்பு இன்னும் வெளியாகவில்லை. இது பழங்காலத்தை சேர்ந்ததா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பின்னர்தான் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Tags :
|
|