Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கண்ணிவெடிகளை கண்டுபிடித்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கல்

கண்ணிவெடிகளை கண்டுபிடித்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கல்

By: Nagaraj Sun, 27 Sept 2020 5:39:42 PM

கண்ணிவெடிகளை கண்டுபிடித்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கல்

எலிக்கு தங்கப்பதக்கம்... கண்ணி வெடிகளை கண்டுபிடித்த எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது இங்கிலாந்து அரசு.

நாட்டின் பாதுகாப்புக்காக கம்போடியாவில் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதால், அந்த கண்ணிவெடிகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி வருகிறது கம்போடிய நாட்டு அரசு.

ஆனால் கண்ணிவெடிகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது பாதுகாப்புக்கு சவாலானது என்பதால் விலங்குகளை வைத்து அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால், கண்ணிவெடிகளை அகற்றும் விலங்குகள் குறித்து தேடிய கம்போடிய அரசுக்கு ஆஃப்ரிக்காவில் கண்ணி வெடிகளை கண்டுபிடிக்க எலி இருப்பது தெரியவந்துள்ளது.

mine,rat,discovery,gold medal,england ,கண்ணிவெடி, எலி, கண்டுபிடிப்பு, தங்கப்பதக்கம், இங்கிலாந்து

அதனால், அந்த எலியை கம்போடியாவிற்கு கொண்டுவரச்சொல்லி புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்ற திட்டமிட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் அந்த எலி 39 கண்ணி வெடிகளை அகற்றியுள்ளது. அதுமட்டுமல்லாமல், வெடிக்காத கண்ணிவெடிகளையும் அந்த எலி கண்டுபிடித்து அவற்றை அகற்றுவதற்கு உதவியுள்ளது.

இதற்காக1 லட்சத்துக்கும் மேற்பட்ட சதுர அடிகளை அந்த எலி தோண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து எலியை கவுரவிக்கும் வகையில், இங்கிலாந்தின் கால்நடை அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியுள்ளது. எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கியது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|