Advertisement

தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு உயர்வா!!!

By: vaithegi Wed, 14 Dec 2022 2:35:05 PM

தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு உயர்வா!!!

சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாகஉயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சரிவை கண்ட தங்கம் விலை இன்று தடாலடியாக அதிகரித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது எப்பொழுதும் ஒரு அலாதி பிரியம் இருக்கும்.

இதனை அடுத்து அதற்கு ஏற்றார் போல் தங்கத்தின் நுகர்வும் நாளுக்கு நாள் உயர்ந்து தான் வருகிறது. மேலும் பங்குச்சந்தை நிலவரம் உள்ளிட்ட ஒரு சில காரணிகளால் தங்கத்தின் விலையும் அன்றாடம் மாற்றம் அடைந்து கொண்டு வருகிறது.

gold,silver ,தங்கம் ,வெள்ளி

கடந்த 2 நாட்களாக சற்று குறைந்த தங்கம் விலை தற்போது அதிரடியாக அதிகரித்துள்ளது. எனவே அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.40,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.5,100க்கு விற்பனையாகிறது.

மேலும் தங்கத்தை தொடர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் அதிரடியாக அதிகரித்த தங்கம் விலையால் தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.


Tags :
|