Advertisement

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

By: vaithegi Wed, 22 June 2022 11:32:09 AM

சென்னையில் இன்று   தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

சென்னை: தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டு பெண்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆண்டாண்டு காலமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்ததற்கான காரணமே சிக்கலின் போது நமக்கு தேவைப்படும் பணத்தை, தங்க நகைகளை அடகு வைத்து பெற்று செய்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததால் பொதுமக்கள் பெருமளவில் கடைகளுக்கு வந்து நகைகள் வாங்கினர். இந்த நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,040க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கு விற்பனையானது.

தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு மக்களை கவலையில் ஆழ்த்தி வந்தது. இந்நிலையில் 18ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் 38,120க்கும் விற்கப்பட்டது.19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.

chennai,gold price,shaving,silver ,சென்னை,தங்கம் விலை,சவரன்,வெள்ளி

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.38,120க்கும் விற்கப்பட்டது.

ஆனால் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்து ரூ. 4,745க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.66 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :