Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாதாரண கட்டண பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நற்செய்தி..

சாதாரண கட்டண பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நற்செய்தி..

By: Monisha Wed, 06 July 2022 9:15:59 PM

சாதாரண கட்டண பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நற்செய்தி..

தமிழ்நாடு: சாதாரண கட்டண பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நற்செய்தி.இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் வாக்குறுதியாக முதல் அமைச்சர் வெளியிட்ட அறிக்கை , தமிழகம் முழுவதும் உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்யும் வசதி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.இதையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சாதாரண கட்டண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பதால் அந்த பஸ்களை இயக்கும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கான வசூல்படி வெகுவாக குறைந்தது.

bus,drivers,condutors,fare ,சாதாரண ,கட்டண பஸ் ,ஓட்டுனர், நடத்துனர்,

இதுபற்றி அரசின் கவனத்துக்கு தொழிற்சங்கங்கள் மூலம் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கொண்டு சென்றனர். இதுபற்றி அரசும் பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் தான் அந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படியை உயர்த்தி வழக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், சாதாரண கட்டண நகர பஸ்களின் ஓட்டுனர், நடத்துனர்களின் வசூல்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பஸ்களில் பெண்கள் இலவச பஸ் பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுனர், நடத்துனர்கள் பெற்று வந்த வசூல்படி குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

Tags :
|