Advertisement

ஈரோடு மக்களுக்கு நற்செய்தி.. இன்று அடித்தது ஜாக்பாட்..

By: Monisha Sun, 10 July 2022 7:45:25 PM

ஈரோடு மக்களுக்கு நற்செய்தி.. இன்று அடித்தது ஜாக்பாட்..

ஈரோடு: ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், வியாபாரிகள் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் செய்து வருகின்றனர்.


இங்கு சத்தியமங்கலம், தாளவாடி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளிலிருந்து தினமும் காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில வாரங்களாக வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்பட்ட காய்கறி விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

people,price,vegetables,fish ,ஈரோடு,வியாபாரிகள்,காய்கறி,மீன்,

குறிப்பாக சத்தியமங்கலம் தாளவாடி பகுதியில் இருந்து அதிகளவு காய்கறிகள் வரத் தொடங்கியதால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென குறைந்து வருகிறது.

அதேபோல் ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே செயல்படும் நீர் மார்க்கெட்டில் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.

வழக்கமாக 20 டன்கள் வரை மீன்கள் வரத்தாகி வரும். ஆனால் இன்று 30 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்து காணப்பட்டது.

Tags :
|
|