Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யூரோ பயணச்சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு வெளியாக மகிழ்ச்சி தகவல்

யூரோ பயணச்சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு வெளியாக மகிழ்ச்சி தகவல்

By: Nagaraj Thu, 09 Feb 2023 10:15:12 PM

யூரோ பயணச்சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு வெளியாக மகிழ்ச்சி தகவல்

ஜெர்மனி: யூரோ பயண சீட்டிற்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. என்னவென்று தெரியுங்களா?

49 யூரோ பயண சீட்டிற்கு ஜெர்மனி அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் 49 யூரோ பயண சீட்டு எப்போது வரும் என மக்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் 5ஆம் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள டொஸ்லா டிக்கட் என்று செல்லப்படுகின்ற 49 யூரோ சீட்டிற்கு தமது அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில் ஜெர்மன் அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு1.5 பில்லியன் யுரோக்களை முதலீடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது கோடைகாலத்தில் ஜெர்மனி முழுவதும் கிடைத்த 9 யூரோ டிக்கெட்டைப் பின்தொடர்ந்து இந்த டிக்கட் அமுல்படுத்தப்படவிருந்தது.

train ticket,practical,may,anticipation,germany ,ரயில் டிக்கெட், நடைமுறை, மே மாதம், எதிர்பார்ப்பு, ஜெர்மனி

ஒரு மாதத்திற்கு 49 யூரோக்கள் செலவாகும் பொதுப் போக்குவரத்து அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்த ஜேர்மனி விரும்புகிறது. இந்த பயணச்சீட்டு நாடு முழுவதும் செல்லுபடியாகும்.

முன்னதாக 9 யூரோ டிக்கெட் திட்டம் ஜேர்மனியில் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அதனை பின்பற்றி, அதிகாரிகள் நிதியுதவிக்கு உடன்பட்டால் இப்போது இந்த புதிய 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 49 யூரோ ரயில் டிக்கட் நடைமுறை மே மாதம் முதல் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
|