Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா விவகாரத்தில் நல்ல தகவல் வரும்; அதிபர் டிரம்ப் உறுதி

கொரோனா விவகாரத்தில் நல்ல தகவல் வரும்; அதிபர் டிரம்ப் உறுதி

By: Nagaraj Tue, 14 July 2020 2:37:43 PM

கொரோனா விவகாரத்தில் நல்ல தகவல் வரும்; அதிபர் டிரம்ப் உறுதி

கொரோனா விவகாரத்தில் விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவர உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்துவிட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1,37,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஒரு வாரமாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந் நிலையில், கொரோனா விவகாரத்தில் விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

president trump,announcement,corona,treatment,test ,அதிபர் டிரம்ப், அறிவிப்பு, கொரோனா, சிகிச்சை, சோதனை

ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா சோதனை திட்டம் உள்ளது. எந்த நாட்டையும் விட எங்கள் சோதனை திட்டம் விரிவானவை.

இதுவரை 4.5 கோடி சோதனைகளை நடத்தி இருக்கிறோம். சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி, சிறப்பான சிகிச்சைகளை அளிக்கிறோம். இந்த விஷயத்தில் மிக விரைவில் உங்களுக்கு எல்லாம் நல்ல தகவல்கள் வர உள்ளன என்று கூறினார். இதனால் அமெரிக்காவில் கொரானா தடுப்பூசி கண்டறியப்பட்டு விட்டதா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags :
|