Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்ய வழிவகுக்கும் கூகுள் அம்சம்

கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்ய வழிவகுக்கும் கூகுள் அம்சம்

By: Karunakaran Sun, 14 June 2020 2:02:48 PM

கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்ய வழிவகுக்கும் கூகுள் அம்சம்

கொரோனா வைரஸ் குறித்து சரியான விவரங்களை வழங்க கூகுள் பல்வேறு அப்டேட்களை வெளியிட்டுள்ளது. தற்போது, ஐசிஎம்ஆர் மற்றும் எம்வைஜிஒவி உள்ளிட்டவற்றுடன் இணைந்து கூகுள் சர்ச், அசிஸ்டண்ட் மற்றும் மேப்ஸ் சேவைகளில் புதிய அம்சம் ஒன்றை கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது.

இதன் மூலம் பயனர்கள் நாடு முழுவதும் இயங்கி வரும் கொரோனா பரிசோதனை மையங்களை கண்டறிய முடியும். பயனர்கள் கொரோனா வைரஸ் சார்ந்த வார்த்தைகளை கூகுளில் தேடினால் புதிதாக டெஸ்டிங் எனும் டேப் தெரியும். மேலும் இதில் தேடலுக்கான பதில்களும் இடம்பெற்றிக்கும். மேலும், கொரோனா பரிசோதனை சார்ந்து பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள், தேவையான விவரங்கள் போன்றவை கூகுள் தெரிவிக்கும்.

coronavirus,google,corona test,google search ,கொரோனா,கூகுள்,பரிசோதனை,கூகுள் சர்ச்

கூகுள் மேப்ஸ் சேவையில் தேடும் போது, முதலில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் விவரங்கள் மற்றும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் அடங்கிய கூகுள் சர்ச் பக்கத்திற்கான இணைய முகவரி காண்பிக்கப்படும். பரிசோதனை மையம் அரசாங்கத்தால் இயக்கப்படுகிறதா அல்லது தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறதா போன்றவையும் இடம்பெறும்.

தற்போது, கூகுள் நிறுவனம் சர்ச், அசிஸ்டண்ட் மற்றும் மேப்ஸ் சேவையில் நாடு முழுக்க 300 நகரங்களில் மொத்தம் 700 பரிசோதனை மையங்களின் விவரங்களை வழங்குகிறது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, மராத்தி, குஜராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என எட்டு இந்திய மொழிகளில் இந்த அம்சம் கிடைக்கிறது.

Tags :
|