Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செலவுகளை குறைக்கும் விதத்தில் கூகுள் நிறுவனம் எடுத்த முடிவு

செலவுகளை குறைக்கும் விதத்தில் கூகுள் நிறுவனம் எடுத்த முடிவு

By: Nagaraj Wed, 05 Apr 2023 09:15:30 AM

செலவுகளை குறைக்கும் விதத்தில் கூகுள் நிறுவனம் எடுத்த முடிவு

நியூயார்க்: பணியிடத்தில் மசாஜ் சேவைகள், உடற்பயிற்சி வகுப்புகள், உடைந்த லேப்டாப்களை மாற்றுதல், வண்டிகள் மற்றும் போக்குவரத்து சேவைகளை கைவிட கூகுள் முடிவு செய்துள்ளது.

உலகப் பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதியாக, உக்ரைன் போர், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தன. இந்த பட்டியலில் கூகுள் நிறுவனமும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி 3ம் தேதி கடைசி வாரத்தில் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் அதிரடி முடிவை கூகுள் எடுத்தது. இதற்காக பணியாளர்களுக்கு தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து ஊழியர்கள் மீள்வதற்குள் கூகுள் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செலவுக் குறைப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு ஊழியர்களின் சேவைகளை கைவிட முடிவு செய்துள்ளது.

company,cost,employees,google,project,result ,, கலக்கம், கூகுள், செலவு, திட்டம், நிறுவனம், பணியாளர்கள், முடிவு

இதன்படி, பணியிடத்தில் மசாஜ் சேவைகள், உடற்பயிற்சி வகுப்புகள், உடைந்த லேப்டாப்களை மாற்றுதல், வண்டிகள் மற்றும் போக்குவரத்து சேவைகளை கைவிட கூகுள் முடிவு செய்துள்ளது. இதுபற்றி கூகுள் நிறுவனத்தின் நிதி துறை தலைவர் ரூத் போரட் மிக அரிதிலும் அரிது என்ற வகையில், அனைத்து பணியாளர்களுக்கும் இ-மெயில் அனுப்பி உள்ளார்.

அதில், செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவது பற்றி சுட்டி காட்டப்பட்டு உள்ளது. இதனால், 2023-ம் ஆண்டில் நீண்டகால சேமிப்புக்கான இலக்கை நிறுவனம் அடையும் என தெரிவித்து உள்ளது.

இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் பயன்பாட்டில் உள்ள காகிதங்களை இணைக்க உதவும் ஸ்டேபிளர்கள் மற்றும் ஒட்ட பயன்படும் டேப்புகள் உள்ளிட்டவற்றையும் கூட கூகுள் நிறுவனம் வழங்காமல் அவற்றை நிறுத்தி விடுவது என முடிவு செய்து உள்ளது.

Tags :
|
|