Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கூகுளின் வித்தியாசமான பாராட்டு

மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கூகுளின் வித்தியாசமான பாராட்டு

By: Nagaraj Thu, 12 Nov 2020 10:00:36 PM

மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கூகுளின் வித்தியாசமான பாராட்டு

வித்தியாசமான பாராட்டு... ஐபிஎல் போட்டியின் 13 வது சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் கண்டது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே 4 முறை அதாவது 2013 ஆம் ஆண்டு துவங்கி 2015, 2017, 2019 என 4 ஆண்டுகள் கோப்பையை வென்றுள்ளது. இந்தநிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான கோப்பையினையும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தி வென்றுள்ளது.

fireworks,google,search,mumbai team,success ,வாணவேடிக்கை, கூகுள், தேடல், மும்பை அணி, வெற்றி

இதன்மூலம் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அதிகமுறை கோப்பைகளை வென்ற சாதனையினையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 13வது ஐபிஎல் சீசனுக்கான போட்டியில் இறுதிப் போட்டியினை வென்று கோப்பையைக் கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையினைக் கைப்பற்றியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முன்னாள் வீரர்கள், இன்னாள் வீரர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்ததோடு கூகுள் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக் கூறும் வகையில் தற்போது கூகுள் தேடலில் ஐபிஎல், ஐபிஎல் 2020, மும்பை இந்தியன்ஸ் என்று தேடினால் ஓப்பன் ஆகும் பக்கத்தில் வாண வேடிக்கைகள் வெடிக்கின்றன.

Tags :
|
|