Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிறுவனங்களுக்கான மின் கட்டண முறை மாற்றம் குறித்து அரசு ஆலோசனை

நிறுவனங்களுக்கான மின் கட்டண முறை மாற்றம் குறித்து அரசு ஆலோசனை

By: vaithegi Thu, 28 Sept 2023 2:54:00 PM

நிறுவனங்களுக்கான மின் கட்டண முறை மாற்றம் குறித்து அரசு ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் இயங்க கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், உச்ச பயன்பாட்டு நேரத்திற்கான மின் கட்டணத்தை நீக்க கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த செப். 24ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

எனவே இதன் காரணமாக மின் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தொழில்துறையினரின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

govt,electricity tariff system change ,அரசு , மின் கட்டண முறை மாற்றம்


தற்போது உச்சபட்ச நேர மின் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் 25% -லிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இதற்கான மானியத்தை தமிழக அரசு மின் வாரியத்திற்கு வழங்கி கொண்டு வருகிறது.

அதே போன்று தற்போது தொழில் துறையினரின் கோரிக்கை ஏற்று மின் கட்டண விகிதங்கள் மாற்றியமைக்கபட்டால் அதனால் ஏற்படக்கூடிய செலவையும் தமிழக அரசு தான் வழங்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து இது குறித்து அதிகார ஒரு அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags :
|