Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இளநிலை படிப்பு .. பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொட க்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இளநிலை படிப்பு .. பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொட க்கம்

By: vaithegi Mon, 08 Aug 2022 6:25:13 PM

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இளநிலை படிப்பு .. பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொட க்கம்

தமிழகம்: தமிழகத்தில் 2022-2023 கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இணையதள வழியில் பதிவு செய்யப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27ம் தேதி வரை நடைபெற்றது.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 7,045 மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்தவகையில் கடந்த ஆண்டை காட்டிலும் 70000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து இந்த விண்ணப்பத்தில் கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

government arts and science colleges,counseling ,கலந்தாய்வு ,இளநிலை படிப்பு

அதன்படி கல்லூரி அளவிலான மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கடந்த 5ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் மொத்தமாக உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் 1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட இளநிலை பட்டப் படிப்புகளில் உள்ள இடங்களை நிரப்பப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Tags :