Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின

4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின

By: Monisha Mon, 01 June 2020 09:25:48 AM

4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த 4-ம் கட்ட ஊரடங்கு கடந்த மே 31-ம் தேதியுடன் நிறைவுப்பெற்றது. இதையடுத்து 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அறிவித்தார். அப்போது அவர் பல தளர்வுகளையும் பொதுமக்களுக்கு அறிவித்தார்.

public curfew,tamil nadu,chief minister edappadi palanisamy,state buses ,5-ம் கட்ட பொது ஊரடங்கு,தமிழ்நாடு,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,அரசு பேருந்துகள்

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. பொது பேருந்து போக்குவரத்தை இன்று முதல் அமல்படுத்துவதற்காக மாநிலத்தின் மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிதுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் அரசு பேருந்துகள் இன்று காலை முதல் ஓடத்தொடங்கின. தமிழகத்தில் சுமார் 68 நாட்களுக்கு பின்னர் இன்று அரசு பேருந்துகள் இயங்கின.

Tags :