Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுவையில் இருந்து பெங்களூருக்கு வருகிற 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது!

புதுவையில் இருந்து பெங்களூருக்கு வருகிற 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது!

By: Monisha Mon, 26 Oct 2020 11:23:32 AM

புதுவையில் இருந்து பெங்களூருக்கு வருகிற 28-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது!

கர்நாடக அரசின் அனுமதியையடுத்து வருகிற 28-ந் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூருக்கு புதுவை அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து புதுவை மாநிலத்திற்குள் தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லை வரை வந்து செல்கின்றன. புதுவையில் இருந்து தமிழகத்திற்கு பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

government buses,pondicherry,bangalore,curfew,corona virus ,அரசு பஸ்கள்,புதுவை,பெங்களூரு,ஊரடங்கு,கொரோனா வைரஸ்

கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து வருகிற 28-ந் தேதி முதல் புதுவையில் இருந்து பெங்களூருக்கு புதுவை அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த பஸ் புதுவையில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும். அந்த பஸ் பெங்களூருவில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படும்.

இந்த பஸ்சில் அரசின் உத்தரவுப் படி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் 33 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கட்டணமாக ரூ.275-ம், முன் பதிவு கட்டணமாக ரூ.25 என மொத்தம் ரூ.300 வசூலிக்கப்படும். இந்த பஸ்சில் பயணம் செய்ய புதுவை பஸ்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையம் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பி.ஆர்.டி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
|