Advertisement

வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முடிவு

By: Nagaraj Thu, 03 Sept 2020 11:30:40 AM

வேலை இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முடிவு

பிரேசிலில் கொரோனா நெருக்கடியில் வேலை இழந்தவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிவரை நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவல் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. பிரேசிலிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்து தவிக்கும் மக்களுக்கு அடுத்த 4 மாதங்களுக்கும் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலே வேலையிழந்தவர்களுக்கு மாதம்தோறும் 600 ரியால் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு முழுவதும் வேலையிழந்த நபர்களுக்கு 300 ரியால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.4000 வழங்கப்படுகிறது.

brazil,corona,financial aid,job loss ,பிரேசில், கொரோனா, நிதியுதவி, வேலை இழந்தவர்கள்

முறைசாரா துறை, தனிநபர் நுண் தொழில் முனைவோர், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சுகாதார நெருக்கடியால் வேலையிழந்தவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அவசரநிலை நிதியுதவியை 67.2 மில்லியன் பிரேசில் குடிமக்கள் பெற்று பயனடைந்து வருவகின்றனர். 4.4 மில்லியன் வீடுகள் அரசின் இந்த நிதியுதவியை நம்பி இருக்கின்றன. லத்தீன் அமெரிக்காவில் அதிகபட்சமாக கொரோனா நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் உள்ள நாடு பிரேசில் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|