Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு

By: Nagaraj Sat, 11 Feb 2023 5:06:23 PM

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு

புதுடெல்லி: சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 40 சதவீதம் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ராஜ்யசபா திமுக உறுப்பினர் வில்சன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக வாகனப் பதிவின் போது ஒருமுறை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர் வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார்.

considered,dmk member wilson,nitin gadkari, ,திமுக உறுப்பினர் வில்சனின் கோரிக்கை, நிதின் கட்கரி, பரிசீலிக்கப்படும்

திமுக உறுப்பினர் வில்சனின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 40 சதவீதம் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் வில்சன் நேற்று மீண்டும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், சுங்கச்சாவடிகளை அகற்றவும், வாகனப் பதிவின் போது சிறிய ஒரு முறை கட்டணம் வசூலிக்கவும் நாடாளுமன்றத்தில் ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags :