Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிரியர் பணி நியமனம் போட்டி தேர்வு மூலம் நடத்தப்படும் என அரசு அறிவிப்பு

ஆசிரியர் பணி நியமனம் போட்டி தேர்வு மூலம் நடத்தப்படும் என அரசு அறிவிப்பு

By: vaithegi Fri, 27 Oct 2023 3:17:55 PM

ஆசிரியர் பணி நியமனம் போட்டி தேர்வு மூலம் நடத்தப்படும் என அரசு அறிவிப்பு


சென்னை: தமிழகத்தில் கடந்த ஆட்சியில் ஆசிரியர் பணி நியமனம் பற்றி அரசு போட்டித் தேர்வு முறையை கொண்டுவந்தது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த பட்டதாரிகள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இந்த 2 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதையடுத்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் துறை அதிகாரிகள் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு, ‘வெயிட்டேஜ்’ முறையில் மட்டும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

govt,teacher recruitment competitive exam ,அரசு , ஆசிரியர் பணி நியமனம் போட்டி தேர்வு


இந்த நிலையில் தற்போது அரசு அறிவித்துள்ள ஆசிரியர் பணி நியமன அறிவிப்பில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த சட்டசபை தேர்தலில் ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் அதை நிறைவேற்றவில்லை என்று பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|