Advertisement

குழந்தைகளுக்காக ரூ.33 கோடி வழங்கிய பின்லாந்து அரசு

By: Nagaraj Mon, 27 Nov 2023 10:08:15 AM

குழந்தைகளுக்காக ரூ.33 கோடி வழங்கிய பின்லாந்து அரசு

லெபனான்: ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் மூலம் சுமார் ரூ.33 கோடியை பின்லாந்து அரசாங்கம் லெபனானுக்கு வழங்கியது.

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் லெபனான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. லெபனானில் பலர் வேலையிழந்து வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அங்குள்ள குழந்தைகளின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

education,health,nutrition service,un report,finland ,கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து சேவை, ஐ.நா. அறிக்கை, பின்லாந்து

இந்தநிலையில் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பின்லாந்து அரசாங்கம் நிதியுதவி வழங்க முடிவு செய்தது. அதன்படி ஐ.நா.வின் குழந்தைகள் நிதியம் மூலம் சுமார் ரூ.33 கோடியை பின்லாந்து அரசாங்கம் லெபனானுக்கு வழங்கியது.

இது குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை வழங்குவதற்கு உதவும் என ஐ.நா.வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|