Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு

By: Monisha Sun, 01 Nov 2020 4:55:51 PM

தமிழகத்தில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில், நவம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாத் தலங்கள், நீச்சல் குளங்களுக்கு தடை தொடருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

tamil nadu,restricted areas,government of tamil nadu,corona virus,vulnerability ,தமிழ்நாடு,கட்டுப்பாட்டு பகுதிகள்,தமிழக அரசு,கொரோனா வைரஸ்,பாதிப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக கோவை - 113, திருவண்ணாமலை - 49, திருவாரூர் - 41, காஞ்சிபுரம் - 29, சென்னையில் 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன என்றும் திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், சிவகங்கை, தஞ்சை, தூத்துக்குடி, விழுப்புரம், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :