Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு ... அரசாணையை தமிழக அரசு வெளியீடு

புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு ... அரசாணையை தமிழக அரசு வெளியீடு

By: vaithegi Wed, 30 Nov 2022 3:49:06 PM

புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு ...  அரசாணையை தமிழக அரசு வெளியீடு

சென்னை: 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு ...... 2022 - 23ஆம் தேதி நிதியாண்டில் தமிழகத்திற்கு 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக சட்டப்பேர்வையில் 110 விதியின் கீழ் ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

எனவே அதன்படி, அதற்கான அரசாணையை தமிழக அரசு போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டிருக்கிறது. பழைய பேருந்துகளை கழிவு செய்துவிட்டு, புதிய பேருந்துகளை வாங்குவதற்காக இந்த 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

tamil nadu govt,new buses ,தமிழக அரசு,புதிய பேருந்துகள்

இதையடுத்து மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்த்து மொத்தமாக 1000 புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. ஒரு பேருந்துக்கு ரூ. 42 லட்சம் என மதிப்பீடு செய்து 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 100 பேருந்துகளும் , கோவை கோட்டத்திற்கு 120 பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன. இதேபோன்று கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 270 பேருந்துகளும், நெல்லை கோட்டத்திற்கு 130 பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.

Tags :