Advertisement

ஊர்களின் பெயரை இனி தமிழ் உச்சரிப்பிலேயே எழுத அரசு ஆணை

By: Nagaraj Thu, 11 June 2020 08:31:38 AM

ஊர்களின் பெயரை இனி தமிழ் உச்சரிப்பிலேயே எழுத அரசு ஆணை

தமிழ் உச்சரிப்பில் எழுத உத்தரவு... தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரை தமிழ் உச்சரிப்பை போன்றே எழுத அரசு ஆணை பிறப்பித்துள்ளது

தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ஏதுவாக ஊர்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக தூத்துக்குடி என்ற ஊரின் பெயர் ஆங்கிலத்தில் Tuticorin என எழுதப்பட்டது ஆனால் இனி தமிழ்நாட்டில் இருக்கும் ஊர்களின் பெயரை தமிழ் உச்சரிப்பை போன்று ஆங்கிலத்தில் எழுதலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

government order,pronunciation,english,tamil language ,அரசு ஆணை, உச்சரிப்பு, ஆங்கிலம், தமிழ் மொழி

எடுத்துக்காட்டாக எழும்பூரை எக்மோர் என கூறி வந்த நிலையில் இனி எழும்பூர் என்று எழுதுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தூத்துக்குடி, பூவிருந்தவல்லி, கோயம்பத்தூர், ஆலங்குளம், மயிலாப்பூர், திருமுல்லைவாயில், தர்மபுரி போன்ற ஊர்களின் பெயர்களையும் தமிழ் உச்சரிப்பை போன்றே எழுதுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.

இதுவரை தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் எழுதி வந்த நிலையில் இப்போது இதுபோன்ற அரசு உத்தரவிட்டுள்ளது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Tags :