Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல் கொள்முதல் மையங்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

நெல் கொள்முதல் மையங்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

By: Nagaraj Thu, 16 Feb 2023 10:42:22 PM

நெல் கொள்முதல் மையங்கள் குறித்து அரசு விளக்கம் அளிக்க உத்தரவு

மதுரை: அரசு விளக்கம் அளிக்க உத்தரவு... மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டம் மேலூரில் பருவ மழை பெய்ததால் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில், அறுவடை செய்யப்படும் நெல் மூடைகளை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நெல் மூட்டைகளை பாதுகாக்க நெல் கிடங்குகளோ, பாதுகாப்பு மையங்களோ இல்லை.

இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு விளைவித்த நெற்பயிர்கள் வெயிலிலும், மழையிலும் நனைந்து வீணாகி வருகிறது.

advocate stalin,madurai-high-court,public interest petition , பொதுநல மனு, மதுரை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் ஸ்டாலின்

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.எனவே, மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் நெல் கிடங்கு பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன்.


நடவடிக்கை இல்லை. எனது மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு மாவட்டங்களில் நீதிபதிகளும், நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து வீணாகி வருவதாக செய்திகள் வருகின்றன. அந்த இடங்களின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

Tags :