Advertisement

பெங்களூரு கலவரம் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவு

By: Nagaraj Thu, 13 Aug 2020 3:41:18 PM

பெங்களூரு கலவரம் குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவு

விசாரணை நடத்த உத்தரவு... பெங்களூருவில் நடந்த கலவரம், துப்பாக்கிச் சூடு மற்றும் காவல்நிலையம் மீது தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் உறவினர் எனக் கூறப்படும் நவீன் என்பவர் மதரீதியான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக, ஏராளமானோர் எம்.எல்.ஏவின் வீட்டு முன்பும், கே.ஜி.ஹள்ளி மற்றும் டி.ஜே.ஹள்ளி காவல்நிலையங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

investigation,bangalore,violence,government of karnataka,cyber ​​crime ,விசாரணை, பெங்களூரு, வன்முறை, கர்நாடக அரசு, சைபர் கிரைம்

குறிப்பிட்ட பகுதிகளில் கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசுக்கு எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ள நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, காவல்நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டாக்காரர்கள் நவீனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாகவும், சரியான ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது என்றும், சைபர் கிரைம் என்பதால் உயரதிகாரிகள் வரும் வரை காத்திருக்கும்படியும் போலீசார் கூறியதால், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags :