Advertisement

தமிழக கடற் தொழிலாளர்களின் 8 படகுகள் அரசுடமை

By: Nagaraj Thu, 02 Mar 2023 12:22:34 PM

தமிழக கடற் தொழிலாளர்களின் 8 படகுகள் அரசுடமை

கொழும்பு: அரசுடமையாக்கப்பட்டுள்ளது... தமிழக கடற்தொழிலாளர்களின் 8 படகுகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்டு உள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான உரிமை கோரும் வழக்கு நேற்றைய தினம் (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, முன்னதாக எட்டு படகுகள் தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றது.

boats,command,government,tamils,court ,படகுகள், கட்டளை, அரசுடமை, தமிழர்கள், நீதிமன்றம்

அதன் போது , 4 படகுகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று படகுகளின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாகாது , தமது சார்பில் வேறு நபர்களை அனுப்பி வைத்தமையால் , குறித்த மூன்று படகுகளும் அரசுடைமையாக்கப்பட்டது.

அதேவேளை ஒரு படகுக்கான உரிமை கோரல் விசாரணைக்காக மே மாதம் திகதியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, மேலும் ஒரு படகு தொடர்பிலான விசாரணைகளும் நடைபெற்று, அந்த படகுக்கான விசாரணைகள் நேற்றைய தினம் முடிவுறுத்தப்பட்டு , அது தொடர்பான கட்டளைக்கு மே மாதம் 5ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற மேலுமொரு படகு வழக்கில் 5 படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. மேலுமொரு படகுக்கான கட்டளைக்காக எதிர்வரும் 24ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது. அதேவேளை மற்றுமொரு படகுக்கான கட்டளைக்காக மே மாதம் 8ஆம் திகதி மன்று திகதியிட்டுள்ளது.

Tags :
|
|