Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அரசு திட்டமிடல்

புதுச்சேரியில் மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அரசு திட்டமிடல்

By: vaithegi Tue, 10 Jan 2023 3:01:28 PM

புதுச்சேரியில் மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அரசு திட்டமிடல்

புதுச்சேரி: தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது புதுச்சேரியிலும் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே உயர்ந்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் மின் கட்டணம் உயர்வு பொதுமக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே அதன்படி தற்போது 1 முதல் 100 யூனிட் வரையிலான கட்டணம் ரூ.1.90 காசுகளாக வசூலிக்கப்படுகிறது.

puducherry,electricity bill ,புதுச்சேரி, மின் கட்டணம்

இதனை ரூ.2.30 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து 101 முதல் 200 யூனிட் வரை ரூ.2.90 ஆக இருப்பதை ரூ.3.30 ஆக அதிகரிக்க உள்ளது. இதே போன்று 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.5 லிருந்து ரூ.5.45 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் 1 முதல் 100 யூனிட் வரை ரூ.5.70க்கு பதிலாக ரூ.6 ஆக அதிகரிக்க உள்ளதாகவும், மேலும் அத்துடன் 101 முதல் 250 யூனிட் வரை ரூ.6.75க்கு பதிலாக ரூ.6.85 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, 251 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.7.50க்கு பதிலாக ரூ.7.60 வசூலிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :